மரத்தடி.காம்(maraththadi.com)
Maraththadi.com Maraththadi.com
மரத்தடிக் குழுமத்தில் சேர,

படத்தைச் சொடுக்குங்கள்
முகப்பு | மரத்தடி.காம்: அறிமுகம் | தொடர்புக்கு | பதிப்புரிமை | தேடு | Font Problem? | RSS Feed    Track the latest articles also at thamizmanam.com
மரத்தடி.காம்(maraththadi.com)
ஆண்டுவிழாப் போட்டி - 2004
ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - 2004
எழுத்தாளரைக் கேளுங்கள்
பண்டிகைப் பரவசங்கள்
கவிதைகள்
கட்டுரைகள்
தொடர்கள்
குளிர்காலப் போட்டி - 2004
ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - 2003
பட்டி மன்றம்- 2003
ஆதிமரத்தடி

மரத்தடி.காம் - ஓர் அறிமுகம்
மரத்தடி.காம் என்ற இந்தத் தளம், மரத்தடி மடற்குழு உறுப்பினர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகளைக் கொள்ளும் ஒரு இடமாகும். இது யுனிகோட் உருக்குறி முறையில் அமைந்த தளம்.

மரத்தடி போன்ற மடற்குழுக்கள் விவாதங்களுக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் ஏற்றவை என்பதில் ஐயமில்லை. இதமான, நகைச்சுவையான பல்வேறு உரையாடல்கள் குழுவை செம்மைப் படுத்துகின்றன; நட்பை வளர்க்கின்றன. இதுமட்டுமே அல்லாமல் பல பயனுள்ள படைப்புகளும், மடற்குழுவில் இடப்பட்டு அதன் மீதான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

மீள் வாசிப்புக்காகவோ, ஆவணப்படுத்தலுக்காகவோ, இன்னபிற காரணங்களுக்காகவோ, ஒருவர் படைப்புகளை மட்டும் குழுவின் பழைய மடல்களிலிருந்து தேடுவதென்பது மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டதே மரத்தடி.காம் தளம். மரத்தடிக் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்த படைப்புகள் மட்டும் இங்கு வலையேற்றப்படுகின்றன. ஏற்றப்படும் படைப்புகள், கூடுமானவரை வகைப்படுத்தப்படுகின்றன.

இந்தத் தளத்தில் காணப்படும் படைப்புகளின் காப்புரிமை படைப்பாளிக்குச் சொந்தமானது. காப்புரிமை பற்றி மேலும் அறிய இங்கே சுட்டவும்.

இந்தத் தளத்தைப் பராமரிப்பவர்கள், தன்னார்வம் கொண்ட மரத்தடிக் குழும உறுப்பினர்கள் சிலர்.

மரத்தடிக் குழுமத்தில் திஸ்கி(TSCII) உருக்குறிமுறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேடும் வசதியை எளிமைப்படுத்த, படைப்புகளை யுனிகோடிற்கு மாற்றி வலையேற்றம் செய்யப்படுகிறது.

இந்த மாற்றங்களைச் செய்யும்போது ஏற்படும் பிழைகளைத் திருத்தியும், அசல் படைப்பில் உள்ள பிழைகளை முடிந்த வரை திருத்தியும் வலையேற்றம் செய்யப்படுகிறது. இவையனைத்தையும் செய்வது குறைந்த அளவில் இருக்கும் இந்தத் தன்னார்வலர்கள் மட்டுமே. அதனால், இந்தத் தளம் இற்றைப்படுத்தப்படும் கால இடைவெளி பற்றி அறுதியிட்டுக் கூற இயலாது. இயன்றவரை செய்து வருகிறோம்.

உங்கள் படைப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய நண்பர்களைப் பெறவும் மரத்தடிக் குழுமத்திற்கு உங்களை வரவேற்கிறோம். மேலே இருக்கும் படிவத்தைப் பயன்படுத்தி நீங்கள் உறுப்பினராகலாம்.

உங்கள் வருகைக்கு நன்றி. மரத்தடி நிழலில் இளைப்பாருங்கள்!

Maraththadi.com - An Introduction
Maraththadi.com is a web site for archiving selected articles of maraththadi Yahoo! group members. This is a unicode encoded Thamiz web site.

Yahoo! discussion group is a great place for having fun, meeting new friends, sharing thoughts and what not. Often times members share their creative writing in the group and discuss it. Should someone need these pieces of writing for future reference, it is not easy to search in Yahoo! groups' archive, for it is not flexible enough.

Maraththadi.com is an idea conceived to archive such pieces of creative writings of maraththadi group members only for easy access and retrieval.

Copyright of articles on this web site rest with individual authors. To know more about maraththadi copyright policy, please click
here.

This site is maintained by volunteer members of maraththadi group, who are few in number.

Articless uploaded in this site are first converted to Unicode from TSCII, which the group uses as a standard.

An effort is made to correct any mistakes resulting from this conversion as well as any mistakes that may be in the original writing. The resources to do these are very limited and hence the frequency of the update of this web site can not be guaranteed.

If you want to join the fun, share your thoughts, creative works, meet new friends, you are welcome to join the group. Please use the form at the top of this page to become a member.

Thanks for visiting maraththadi.com and enjoy your stay!